அம்னோவில் நீடிப்பேன்-முகிதின் யாசின்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
அம்னோவில் நீடிப்பேன்முகிதின் யாசின்

 

  கோலாலம்பூர், 3 மார்ச்-  அண்மையில் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட  டான் ஶ்ரீ முகிதின் யாசின், தாம் அம்னோவில் தொடர்ந்து நீடித்திருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

 “நான் 70 ஆண்டுகளிலிருந்து அம்னோவில்  உறுப்பினராக இருக்கிறேன். எனவே, நான் கட்சியிலிருந்து வெளியேறுவேனா என்ற பேச்சுக்கே இடமில்லை” என டான் ஶ்ரீ முகிதின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

“அம்னோ பேராளர் மாநாட்டின் போது நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், கட்சியிலிருந்து விலகுவது நியாயமா” என முன்னாள் துணைப்பிரதமருமான அவர் கேள்வியெழுப்பினார். 

மூலக்கதை