பீஃபா தலைவர் தேர்தல்: ஜியானி வாகைசூடினார்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
பீஃபா தலைவர் தேர்தல்: ஜியானி வாகைசூடினார்!

ஜுரிச், பிப்.27-பீஃபா எனப்படும் அனைத்துலகக் கால்பந்து சம்மேளனத் தேர்தலில், ஐரோப்பிய கால்பந்து யூனியன் தலைவரான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜியானி இன்ஃபண்டினோ, வெற்றி பெற்ரார். அதன் 9ஆவது தலைவராகப் பொறுப்பேற்கிறார்.இங்கு நடந்த தேர்தலில், அவர் 115 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பஹ்ரின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவருமான  ஷேக் சல்மான் அல் கலிஃபா, 88 வாக்குகள் பெற்றார் மொத்த வாக்குகள் 207 என்பது குறிப்பிடத்தக்கது.தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இதர வேட்பாளர்களில் ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹுசைன் 4 வாக்குகள் பெற்றார். மற்றவர்கள் வாக்குகள் எதனையும் பெறவில்லை உலகக் கால்பந்து நிர்வாகத்தை பேணி வரும் பீஃபாவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவேன் என்று 45 வயதுடைய வழக்கறிஞருமான ஜியானி உறுதி அளித்தார்.

மூலக்கதை