மெஸ்சி அனுப்பிய ஜெர்ஸி: மகிழ்ச்சியில் ஆப்கான் சிறுவன்.

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மெஸ்சி அனுப்பிய ஜெர்ஸி: மகிழ்ச்சியில் ஆப்கான் சிறுவன்.

காபுல், பிப்.26-

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முர்தசா அகமதி என்ற சிறுவனுக்கு உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி பரிசாக அனுப்பிவைத்த அவரது கையெளுத்திட்ட டிசட்டையும் பந்தும் அச்சிறுவனுக்கு கிடைத்துவிட்டது. இதனால் அகமதி பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளான்.

கால்பந்து விளையாட்டில் சிறுவன் அகமதிக்கு அதிக ஆர்வம். ஆர்வ மிகுதியில், அர்ஜென்டினா கால்பந்து அணியின் சீருடையில் உள்ள வடிவத்தைக் கொண்ட பிளாஸ்டிக் பையை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவன் முர்தசா அகமது அணிந்திருந்த புகைப்படம் உலகம் முழுவதும் இணையத்தளங்களில் மிகவும் பிரபலமானது. இது மெஸ்ஸிக்கும் தெரியவந்தது.

இந்நிலையில், சிறுவன் அகமதிக்கு, மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட மேல்சட்டைகளை அனுப்பியிருக்கிறார். அந்தச் சட்டையுடன் ஒரு கால்பந்தையும் அனுப்பியுள்ளார். அது காபுல் கால்பந்து கூட்டமைப்பு அலுவலகத்தில் உள்ளது.

மெஸ்ஸி அனுப்பிய சட்டையுடன் அகமதி இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

இதற்கிடையில், சிறுவனை எப்படியாவது மெஸ்ஸியை சந்திக்க வைக்க வேண்டும் என அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலக்கதை