சுமத்ரா அருகே நிலநடுக்கம்: கடலோரம் செல்வதை தவிர்க்கும்படி மலேசியர்களுக்குக் கோரிக்கை!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
சுமத்ரா அருகே நிலநடுக்கம்: கடலோரம் செல்வதை தவிர்க்கும்படி மலேசியர்களுக்குக் கோரிக்கை!

கோலாலம்பூர், மார்ச் 2-சுமத்ராவுக்கு மேற்கே நிகழ்ந்த மிகக் கடுமையான நிலநடுக்கத்தினால், பாதிக்கக்கூடிய அளவிலான சுனாமி ஆபத்து எதுவும் மலேசியாவுக்கு இல்லை என்று வானிலைத் துறை அறிவித்திருக்கிறது.எனினும், மலேசியாவின் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக, கெடா பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகியவற்றின் கடலோரப் பகுதிகளில் இருப்பவர்கள் கடல் பக்கம் செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இந்தோனிசியாவில் மேற்கு சுமத்ரா, வட சுமத்ரா மற்றும் ஆச்சே பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பாடாங் பகுதியைச் சேர்ந்த மக்கள், சுனாமி அச்சம் காரணமாக் மேட்டுப்பாங்கான இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக நகர்ந்தனர்.அதே வேளையில், தங்களது தொடக்கநிலை மதிப்பீட்டின் படி சுனாமி அபாயம் த்ங்களுக்கு இல்லை என்று இந்தியா அறிவித்திருக்கிறது. இலங்கைக்கும் சுனாமி ஆபத்தில்லை என்று தெரிய வந்துள்ளது.ஆஸ்திரேலியாவும் கொக்கோஸ் தீவு மற்றும் கிறிஸ்மஸ் தீவு ஆகியவை சுனாமியால் தாக்கப்படலாம் என்று எச்சரித்திருக்கிறது.இன்று இரவு 8.49 மணியளவில் மேற்கு சுமத்ராவை நிலநடுக்கம் தாக்கியது. இதனால், சிலாங்கூரில் ஷா ஆலம், சுபாங் மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. ஜொகூரின் சில இடங்களிலும் இது உணரப்பட்டது.தென் மேற்கு பாடாங்கிலிருந்து 808 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டருக்குக் கீழே பூமிக்கடியில் நிலநடுக்க மையம் உருவானது.ரிக்டர் அளவில் 7.9 எனப் பதிவான இந்த நிலநடுக்கம் தொடர்பில் சுனாமி எச்சரிக்கையை இந்தோனிசியா விடுத்திருக்கிறது.ஒருவேளை சுனாமி ஏற்பட்டாலும் அதை பெரும்பாலும் சுமத்ரா தீவு தடுத்துவிடும் என்பதால் மலேசியாவுக்கு பாதிப்பு வராது என்று வானிலைத் துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மூலக்கதை