சுமத்ராவுக்கு மேற்கே கடும் நிலநடுக்கம்! மலேசியாவுக்கு சுனாமி ஆபத்தில்லை!!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
சுமத்ராவுக்கு மேற்கே கடும் நிலநடுக்கம்! மலேசியாவுக்கு சுனாமி ஆபத்தில்லை!!

கோலாலம்பூர், மார்ச் 2-சுமத்ராவுக்கு மேற்கே நிகழ்ந்த மிகக் கடுமையான நிலநடுக்கத்தினால், பாதிக்கக்கூடிய அளவிலான சுனாமி ஆபத்து எதுவும் மலேசியாவுக்கு இல்லை என்று வானிலைத் துறை அறிவித்திருக்கிறது.இன்று இரவு 8.49 மணியளவில் மேற்கு சுமத்ராவை நிலநடுக்கம் தாக்கியது. இதனால், சிலாங்கூரில் ஷா ஆலம், சுபாங் மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. ஜொகூரின் சில இடங்களிலும் இது உணரப்பட்டது.தென் மேற்கு பாடாங்கிலிருந்து 808 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டருக்குக் கீழே பூமிக்கடியில் நிலநடுக்க மையம் உருவானது.ரிக்டர் அளவில் 7.9 எனப் பதிவான இந்த நிலநடுக்கம் தொடர்பில் சுனாமி எச்சரிக்கையை இந்தோனிசியா விடுத்திருக்கிறது. மலேசியாவுக்கு சுனாமி ஆபத்து இல்லை என்று வானிலைத் துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஒரு வேளை சுனாமி ஏற்பட்டாலும் அதை  பெரும்பாலும் சுமத்ரா தீவு தடுத்துவிடும் என்பதால் மலேசியாவுக்கு பாதிப்பு வராது என்றார் அவர்.

மூலக்கதை