‘ஸீகா’ வைரஸ்: நரம்புக் கோளாறை ஏற்படுத்தும் அபாயம்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
‘ஸீகா’ வைரஸ்: நரம்புக் கோளாறை ஏற்படுத்தும் அபாயம்!

பாலினேசியா, மார்ச்.2-‘ஸீகா’ வைரஸ் ஒரு கடுமையான நரம்பியல் கோளாறுக்கு வழிவகுக்கும் என்றும், அதனால் பக்கவாதமும் உயிரிழப்பும்கூட ஏற்படலாம் என்றும் இந்த வைரஸின் தாக்கம் தொடர்பில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பாலினேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு தி லான்சட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட நான்காயிரம் பேரில் ஒருவருக்கு குயில்லன்பேரி நோய்க் குறி வரும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.

கொசுக்களால் பரவக்கூடிய ஸீகா வைரஸ், லத்தின் அமெரிக்க நாடுகளில் சமீப மாதங்களாக வேகமாக பரவிவருகிறது.

தலைப் பகுதி சிறுத்து, வளர்ச்சிக் குன்றிய மூளையுடன் குழந்தைகள் பிறப்பதற்குக் காரணமான மைக்ரோஸிபில்லி நோயின் அதிகரிப்புக்கு இந்த வைரஸ் காரணமாக இருந்துள்ளது.

 

 

மூலக்கதை