குழந்தையின் தலையைத் துண்டாக வெட்டி சாலையில் நடந்த பெண்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
குழந்தையின் தலையைத் துண்டாக வெட்டி சாலையில் நடந்த பெண்

 

மாஸ்கோ, மார்ச் 1-ரஷ்யாவில் முஸ்லிம் பெண் ஒருவர் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையோடு, மெட்ரோ ரயில் நிலையத்தில் நான் ஒரு தீவிரவாதி என கத்தும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த கியுல்செஹ்ரா போபோகுலோவா (வயது 39) என்ற மாது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில்  குழந்தையைப் பராமாரிக்கும் ஆயாவாகப் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், கடந்த 18 மாதங்களாக தான் கவனித்து வந்த குழந்தையின் தலையை திடீரென வெட்டிய அவர் அதை எடுத்துக்கொண்டு  மெட்ரோ ரயில் நிலையம் வந்தார்.  

 குழந்தையின் தலையை கையில் பிடித்தவாறு “அல்லாஹு அக்பர்” என்றும் தான் ஒரு தீவிரவாதி என்றும்  கத்தியவாறு நடந்து சென்றார். இக்காட்சியை அவ்வழியாகச் சென்றவர் காணொளியாகப் படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இக்காணொளியைப் பார்ப்போர் அதிர்ச்சியில் உறைந்து விடுகின்றனர். 

மூலக்கதை