நூலகம் கோரிய மாணவியை வைத்தே திறப்பு விழா செய்த எம்.எல்.ஏ

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
நூலகம் கோரிய மாணவியை வைத்தே திறப்பு விழா செய்த எம்.எல்.ஏ

சென்னை, மார்ச் 1- பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூலகத்தைத் திறக்க கோரி மனு தந்த மாணவியைக் கௌரவிக்கும் வகையில் அம்மாணவியையே நூலகத்தை திறப்பு விழா செய்ய வைத்தார் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. இச்செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொகுதியில் உள்ள கிராமத்திற்கு வந்த திமுக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சிவசங்கரிடம் அப்போது 8ம் வகுப்பு படித்த மாணவி செம்பருத்தி, கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் நூலகத்தைத் திறக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதனைப் பற்றி விசாரித்தபோது அந்த தூலகம் தனியார் கட்டத்தில் உள்ளதால் திறப்பதில் சிரமம் உள்ளதை அறிந்தார்.

இதன் பின்னர், அவர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி கிளை நூலகம் ஒன்றை அமைத்தார்.

இந்த நூலகம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. நூலகத்திற்கு கோரிக்கை விடுத்த செம்பருத்தியை வைத்தே திறப்பு விழா செய்தார் எம்.எல்.ஏ. அதோடு, அம்மாணவியின் பெயரை கல்வெட்டிலும் பதிய செய்துள்ளார்.

இவரின் இச்செயல் அவ்வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மூலக்கதை