பிரபல ஹாலிவுட் நடிகர் ஜியார்ஜ் கென்னடி காலமானார்!
நியூயார்க், மார்ச் 1-
ஆங்கிலத் திரையுலகின் பிரசித்தி பெற்ற நடிகர்களில் ஒருவரான ஜியார்ஜ் கென்னடி தம்முடைய 91 ஆவது வயதில் காலமானார்.
‘நேக்கெட் கன்’ படத் தொடர், மற்றும்‘கூல் ஹேண்ட் லூக்’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஜியார்ஜ் கென்னடி, நேற்று உயிர் நீத்ததாக அவருடைய பேரன் கோரி ஸ்கென்கெல் தெரிவித்தார்.
இடாஹோ மாநிலத்திலுள்ள போய்ஸ் நகரில் மருத்துவமனை ஒன்றில் அண்மைய காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு அவருடைய துணைவியார் ஜோகன் காலமான பின்னர் அவர் மிகுந்த கவலையில் இருந்துவந்தார்.
1924ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்த ஜியார்ஜ் கென்னடி, ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஓர் இசைக் கலைஞர். தாயார் ஒரு நடனமணி.
2ஆம் உலகப் போரில் அமெரிக்கப் படையில் பணிபுரிந்து பல விருதுகளைப் பெற்றவர் இவர். 1968ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை இவர் வென்றார். 1975இல் வெளிவந்த ‘எர்த் குவெக்’ திரைப்படம் ஜியார்ஜ் கென்னடிக்கு புகழ் தந்த படங்களில் ஒன்றாகும்.
இவர் ஆகக் கடைசியாக, 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘தி கேம்பளர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
