14 பேர் கொலை: பிணக்குவியலைப் பார்த்து பத்திரிகையாளர் அதிர்ச்சி மரணம்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
14 பேர் கொலை: பிணக்குவியலைப் பார்த்து பத்திரிகையாளர் அதிர்ச்சி மரணம்

 

  மகாராஷ்டிரா, மார்ச் 1- மகாராஷ்டிராவில் கடந்த சில தின்ங்களுக்கு முன்  பட்ட்தாரி இருவர் தமது குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களை எடுப்பதற்காகச் சென்ற  தனியார் தொலைகாட்சி  ஊழியர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மகாராஷ்டிரா, தானே நகரைச் சேர்ந்த அந்த 35 ஆடவர், 7 குழந்தைகள், 6 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, அனைவரின் கழுத்தையும் அறுத்து கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டார். சொத்து தகராறு காரணமாக இக்கொலையை அவர் புரிந்திருக்கலாம் என  போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இந்நிலையில், இச்சம்பவத்தைப் படம் பிடிக்கச் சென்ற தனியார் தொலைகாட்சி நிறுவனம் ஒன்றின்  புகைப்படக் காரர் ரதன் பவுமிக் (வயது 30)  என்பவர் வீட்டினுள் பிணக்குவியலைக் கண்ட அதிர்ச்சியில் நெஞ்சுவலிக்குள்ளானார். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

 அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட்து. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

 

பிணக்குவியலைப் பார்த்து பத்திரிகையாளர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மூலக்கதை