இந்தியச் சிறுவன் நடித்த ‘தி ஜங்கள் புக்’ ஏப்-8இல் திரையீடு

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
இந்தியச் சிறுவன் நடித்த ‘தி ஜங்கள் புக்’ ஏப்8இல் திரையீடு

நியூயார்க், பிப்.29-

ஹாலிவுட்டிற்கு முன்னதாகவே இந்தியாவில் வெளியாகிறது திரைப்படம் "தி ஜங்கிள் புக்". வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரிப்பில், 'அயன் மேன்' புகழ் ஜோன் பிவ்ரேவ் இயக்கியுள்ள இப்படத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கனான, 12 வயது சிறுவன் நீல் சேத்தி, இப்படத்தில் மோக்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற ‘தி ஜங்கிள் புக்’ கதையை இதுவரை புத்தக வடிவிலும், கார்ட்டூன் வடிவிலும் பார்த்த குழந்தைகளுக்கு, டிஸ்னி 3D லைவ்-அனிமேஷன் தொழில் நுட்பத்தில் கண்களுக்கு விருந்தாக்க வருகிறது. ஏப்ரல் 15 ஹாலிவுட்டில் வெளியாக இருக்கும் இப்படத்தினை, ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஏப்ரல் 8 தேதியன்று இந்தியாவில் வெளியிட முடிவு செய்துள்ளதாக டிஸ்னி இந்தியாவின், துணைத் தலைவர் அம்ரிதா பாண்டே கூறியுள்ளார்.

அண்மையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. தி ஜங்கிள் புக் கதையில் வரும் மோக்லி, பாலு, பகீரா, கா மற்றும் ஷேர் கான் போன்ற கதாபாத்திரங்கள் இந்திய மக்களிடையே நன்கு பரிச்சயமான, புகழ் பெற்ற கதை என்பதோடு, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது, மும்பையில் பிறந்து, இலக்கியத்தில் நோபல் பரிசு வென்ற ருத்யார்ட் கிப்ளிங்கின் 'தி ஜங்கிள் புக்' நாவலைத் தழுவியே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலக்கதை