லூய்ஸ் வான் கெல்லை வறுத்தெடுத்த இணையக் குறும்பர்கள்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
லூய்ஸ் வான் கெல்லை வறுத்தெடுத்த இணையக் குறும்பர்கள்!

மன்செஸ்ட்டர், பிப்.28-

மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவுக்கும் அர்சனலுக்கும் இடையேயான ஆட்டத்தின் போது தம்முடைய குழுவுக்கு எதிராக அடிக்கடி நடுவர் எச்சரிக்கை அட்டைகளைக் காட்டியதை ஆட்சேபித்தார் மன்.யுனைடெட் குழு நிர்வாகி லூய்ஸ் வான் கெல்.

அப்போது, அர்சனல் ஆட்டக்காரர் ஒருவர், எப்படி வேண்டுமென்றே கீழே விழுந்து நாடகமாடினார் என்பது பற்றிப் புகார் செய்த வான் கெல், கண்காணிப்பு நடுவரின் முன்னிலையில் கீழே விழுந்து காட்டினார்.

எப்போதுமே தம்முடைய இருக்கையை விட்டு வெளியே வராத வான் கெல், இவ்வாறு நடந்து கொண்டது ரசிகர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக, வித்தியாசமானதாக அமைந்தது போலும்...!

இதுதான் சாக்கு என்று கருதிய இணையக் குறும்பர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டத் தொடங்கி விட்டனர். வான் கெல் விழுந்து கிடக்கும் காட்சியை, இட்டுக்கட்டி, வெட்டி ஒட்டி இஷ்டத்திற்கு ‘நக்கல்’ நாடகத்தை நடத்தி அவரை வறுத்தெடுத்து விட்டனர்.

 

விதவிதமாக வெட்டி ஒட்டிய படங்களை வெளியிட்டு, வலைதளங்களில் ஒரு சுழற்சியை உண்டுபண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டனர் இந்த இணையக் குறும்பர்கள்.

மூலக்கதை