அர்சனலின் காலை வாரியது மன்செஸ்ட்டர் யுனைடெட்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
அர்சனலின் காலை வாரியது மன்செஸ்ட்டர் யுனைடெட்!

மன்செஸ்ட்டர், பிப்.29-

பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்திற்கு குறிவைத்திருக்கும் அர்சனலின் காலை வாரிவிட்டது மன்செஸ்ட்டர் யுனைடெட். இங்கு பரபரப்போடு நடந்த ஆட்டத்தில் மன்.யுனைடெட் குழு 3-2 என்ற கோல் கணக்கில் அர்சனலை வென்றது.

முற்பகுதி ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்திலும் 32ஆவது நிமிடத்திலும் மன்.யுனைடெட் குழுவின் இளம் வீர்ரான  மார்க்கஸ் ரஷ்போர்டு, மாறி மாறி கோலடித்து அர்சனலுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை தந்தார்.

எனினும், 40ஆவது நிமிடத்தில் முன்னாள் மன்.யுனைடெட் வீர்ர் டன்னி வெல்பேக்,  அர்சனல் குழுவின் முதல் கோலை அடித்தார். இதனால், உற்சாகம் அடைந்த அர்சனல், தொடர்ந்து மன்.யுனைடெட்டிற்கு நெருக்குதல் கொடுக்கத் தொடங்கியது. ஆனால், 65ஆவது நிமிடத்தில் ஹெரேரா ஒரு கோலைப் போட்டு 3-1இல் மன். யுனைடெட் முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

இருப்பினும், அர்சனல் உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் வகையில் 69ஆவது நிமிடத்தில் மெசுட் ஓஷில் மூலம் தனது இரண்டாவது கோலை அடித்தது. ஆட்டத்தைச் சமமாக்க அர்சனல் போராடியது என்றாலும் கடைசி வரை மன்.யுனைடெட் தற்காத்து தனது வெற்றியை நிலைநாட்டியது. 

 

மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் 2-1 என்ற கோல்கணக்கில் சுவான்ஸீ குழுவை வீழ்த்தி, 2ஆவது இடத்திற்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் 19ஆவது நிமிடத்தில் சுவான்ஸீ வீர்ர் பலோஸ்சி முதலில் கோலைப் போட்டு டோட்டன்ஹாமிற்கு அதிர்ச்சியைத் தந்தார்.

 

பிற்பகுதி ஆட்டத்தின் போது 70ஆவது நிமிடத்தில் நாசர் சாட்லியும் 77ஆவது நிமிடத்தில் டன்னி ரோசும் இரு கோல்களைப் போட்டு டோட்டன்ஹாமிற்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

மூலக்கதை