நம்ம நாட்டு வீரர் அடித்த கோல்: உலகம் முழுதும் ஒரே பரபரப்பு!
கோலாலம்பூர், பிப்.17-
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்களே, அது மாதிரி நம்முடைய நாட்டு கால்பந்து வீர்ர் அடித்த கோல், இப்போது உலகப் பிரசித்தி பெற்று வருகிறது
பினாங்கு கால்பந்து குழுவின் முன்னணி ஆட்டக்கார்ரான முகமட் ஃபைஷ் சுப்ரி செவ்வாய்க் கிழமையன்று பகாங்கிற்கு எதிரான ஆட்டத்தில் 62 ஆவது நிமிடத்தில் ஃபிரீ கிக் மூலம் அபாரமான கோல் ஒன்றை அடித்தார். முகமட் ஃபைஸ் தொலை தூரத்தில் இருந்து அடித்த அந்தக் கோல், ரசிகர்களைத் திகைக்க வைத்தது.
அவர் அடித்த அந்தப் பந்து, தொடக்கத்தில் நேரான திசையில் சென்ற போதிலும், இடமிருந்து வலமும் பின்னர் வலமிருந்து இடமுமாக வளைந்து, சற்று உயரத்திலிருந்து பகாங் கோல் வளைக்குள் செங்குத்தாக இறங்கியது. இந்தப் பந்து சென்ற விதமானது, பௌதீக விதிக்கே சற்று முரணானதாக விளங்குகிறது என்று பிரிட்டீஷ் ஊடகம் ஒன்று வர்ணித்துள்ளது’
அவர் கோல் அடித்த காணொளி, சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்புடன் பரவியது. இப்போது உலக அளவில் கால்பந்து ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுவருகிறது. சிறந்த கோலுக்காக உலக ரீதியில் வழங்கப்படும் புஷ்காஸ் விருதுக்கு இந்தக் கோல் முன்மொழியப்படும் என்று தெரிய வந்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
