நம்ம நாட்டு வீரர் அடித்த கோல்: உலகம் முழுதும் ஒரே பரபரப்பு!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா

கோலாலம்பூர், பிப்.17-

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்களே, அது மாதிரி நம்முடைய நாட்டு கால்பந்து வீர்ர் அடித்த கோல், இப்போது உலகப் பிரசித்தி பெற்று வருகிறது

பினாங்கு கால்பந்து குழுவின் முன்னணி ஆட்டக்கார்ரான முகமட் ஃபைஷ் சுப்ரி செவ்வாய்க் கிழமையன்று பகாங்கிற்கு எதிரான ஆட்டத்தில் 62 ஆவது நிமிடத்தில் ஃபிரீ கிக் மூலம் அபாரமான கோல் ஒன்றை அடித்தார். முகமட் ஃபைஸ் தொலை தூரத்தில் இருந்து அடித்த அந்தக் கோல், ரசிகர்களைத் திகைக்க வைத்தது.

அவர் அடித்த அந்தப் பந்து, தொடக்கத்தில் நேரான திசையில் சென்ற போதிலும், இடமிருந்து வலமும் பின்னர் வலமிருந்து இடமுமாக வளைந்து, சற்று உயரத்திலிருந்து பகாங் கோல் வளைக்குள் செங்குத்தாக இறங்கியது. இந்தப் பந்து சென்ற விதமானது, பௌதீக விதிக்கே சற்று முரணானதாக விளங்குகிறது என்று பிரிட்டீஷ் ஊடகம் ஒன்று வர்ணித்துள்ளது’

அவர் கோல் அடித்த காணொளி, சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்புடன் பரவியது. இப்போது உலக அளவில் கால்பந்து ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுவருகிறது. சிறந்த கோலுக்காக உலக ரீதியில் வழங்கப்படும் புஷ்காஸ் விருதுக்கு இந்தக் கோல் முன்மொழியப்படும் என்று தெரிய வந்துள்ளது.

மூலக்கதை