மன்.சிட்டி பரிதாபத் தோல்வி: செல்சீ 5-1இல் வென்றது!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மன்.சிட்டி பரிதாபத் தோல்வி: செல்சீ 51இல் வென்றது!

மன்செஸ்ட்டர், பிப்.22-

எப்.ஏ.கிண்ண கால்பந்துப் போட்டியில் மன்செஸ்ட்டர் சிட்டி குழு 5-1 என்ற கோல் கணக்கில் செல்சீயிடம் பரிதாபகரமாகத் தோல்வி கண்டது.

வழக்கத்திற்கு மாறாக, மன்.சிட்டி, தனது முன்னணி ஆட்டக்காரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, இரண்டாந்தரக் குழுவைக் களத்தில் இறக்கியதே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று வர்ணிக்கப்பட்டது.

ஆட்டத்தின் முற்பகுதியில் 35ஆவது நிமிடத்தில் செல்சீ வீர்ர் டியாகோ கோஸ்டா முதலில் கோல் அடித்தார் என்றாலும், உடனடியாக மன்.சிட்டி வீர்ர் டேவிட் பவ்பலா ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை சம்மாக்கினார்.

பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய பின்னர், செல்சீ முழு வீச்சில் விளையாடியது. வில்லியன் (48ஆவது நிமிடம்), கெர்ரி காஹில் (53ஆவது நிமிடம்), எடென் ஹஷார்டு (67ஆவது நிமிடம்), மற்றும் டிராவ்ரே (89ஆவது நிமிடம்), ஆகியோர் தொடர்ந்து கோல்களை அடித்து செல்சீக்கு அபார வெற்றியைத் தேடித் தந்தனர்.

இந்த வெற்றியின் வழி, செல்சீ எப்.ஏ. கிண்ண காலிறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றுள்ளது.

 

 

 

மூலக்கதை