இவ்வருடம் 2,60,000 ற்கும் அதிகமானோர் கனேடியக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்! கனேடிய மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
இவ்வருடம் 2,60,000 ற்கும் அதிகமானோர் கனேடியக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்! கனேடிய மத்திய அரசு அறிவிப்பு

இந்த வருடத்தில் மிகவும் அதிகமான எண்ணிக்கையானனோரை தாம் புதிதாக கனேடியர்களாக வரவேற்றுள்ளதாக கனேடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து அறுபது ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக கனேடிய குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக மத்திய குடிவரவு மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சான்டர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கனேடிய குடியுரிமையை பெற்றுக்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருட எண்ணிக்கை இரண்டு மடங்கினை விடவும் அதிகம் எனவும், கனேடிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடத்திலேயே இவ்வளவு அதிகளவானோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறைகளில் அண்மையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதனையும் சுடடிக்காட்டியுள்ள அவர், விண்ணப்பங்களை துரிதமாக பரிசீலிக்கும் செயற்பாட்டின் விளைவுகளை தற்போது காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு செய்யும் மூன்று படிமுறைகள் ஒரு படிமுறையாக மாற்றப்பட்ட இந்த புதிய நடைமுறை கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடப்புக்கு வந்துள்ளமை குறிப்பிடத்த்ககது.

இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வந்த பின்னர் இதுவரை 115,000 ற்கும் அதிகமானோர் கனேடிய குடியுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 90 சதவீதம் அதிகம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை