இப்படியும் பெனால்டி அடிக்கலாமா? மெஸ்சியின் விநோதம்! (வீடியோ பதிவேற்றம்)

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
இப்படியும் பெனால்டி அடிக்கலாமா? மெஸ்சியின் விநோதம்! (வீடியோ பதிவேற்றம்)

பார்சிலோனா,பிப்.15-

ஸ்பெய்ன் லீக் போட்டியில் முன்னணி வகித்து வரும் பார்சிலோனா குழு மீண்டும் ஓர் அதிரடி ஆட்டத்தை வழங்கியது. செல்டா டி விக்கோ குழுவை அது 6-1 என்றகோல் கணக்கில் வென்றது. அதோடு விநோதமான முறையில் பெனால்டி அடித்து கால்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது

இந்த ஆட்டத்தில் முன்னணி வீர்ர் லூய்ஸ் சுவரெஸ் மூன்று கோல்களைப் போட்டார். எஞ்சிய கோல்களை மெஸ்சி, ரக்கிடிக், நெய்மார் ஆகியோர் அடித்தனர்.

இந்த ஆட்டத்தில் வழக்கத்திற்கு மாறான விநோதம் ஒன்று நடந்தது. பார்சிலோனாவுக்கு நடுவர் பெனால்டி வழங்கினார். இந்தப் பெனால்டியை மெஸ்சி அடிக்க தயார் நிலையில் இருந்தார்.

ஆனால், எவருமே எதிர்பாராத வகையில் இந்த பெனால்டியை நேரடியாகத் தாமே அடிக்காமல் பந்தைச் சாதுர்யமாக பெனால்டி வட்டத்திற்குள் முன்னேறி ஓடிவந்த சுவரெஸை நோக்கி அனுப்ப, சுவரெஸ் அதனைக் கோலாக்கிய போது இப்படியும் பெனால்டி அடிக்கலாம் என்பதை மெஸ்சி காட்டியதோடு, பார்சிலோனா ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.  எதிரணி ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தினார்.

 

எனினும், இதற்கு முன்பு இருமுறை இதே போன்று பெனால்டி கோலடிக்க முயற்சிகள் நடந்துள்ளன என்றாலும் அது வெற்றிகரமாக அமையவில்லை.

மூலக்கதை