மன்.சிட்டி சரிந்தது: டோட்டன்ஹாம் அதிரடி ஆட்டம்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மன்.சிட்டி சரிந்தது: டோட்டன்ஹாம் அதிரடி ஆட்டம்!

லண்டன், பிப்.15-

பலம்பொருந்திய குழுவாகக் கருதப்படும் மன்செஸ்ட்டர் சிட்டி குழுவுக்கும் டோட்டன்ஹாம் குழுவுக்கும் இடையே நடந்த இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று டோட்டன்ஹாம் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது.

இரண்டு குழுக்களுக்குமே இந்த ஆட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. முற்பகுதி ஆட்டத்தில் இரு குழுக்களுமே மாறி மாறித் தாக்குதல் நடத்திய போதிலும் கோல் எதுவும் போடமுடியவில்லை.

பிற்பகுதி ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில், மன்.சிட்டி வீர்ர் ரஹிம் ஸ்டெர்லிங் பெனால்டி பகுதியில் பந்தை கையால் தடுத்தற்காக நடுவர், டோட்டன்ஹாமிற்கு பெனால்டி வழங்கினார். இதை அதன் முன்னணி கோல் வீர்ர் ஹார்ரி கேன் கோலாக்கினார்.

இதன் பின்னர் ஆட்டத்தைத் தீவிரப்படுத்திய மன்.சிட்டி,, இடைவிடாத தாக்குதல்களுக்குப் பிறகு 74ஆவது நிமிடத்தில், இளம் வீர்ர் கிளெச்சி கேனாச்சோ மூலம் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமமாக்கியது.

ஆட்டம் சமநிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் 83ஆவது நிமிடத்தில் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி டோட்டன்ஹாமின் வெற்றிக் கோலை கிறிஸ்டியன் எரிக்சன் போட்டார்.

 

இதன் வழி தற்போது டோட்டன்ஹாம் குழு ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. லெய்செஸ்ட்டர் சிட்டி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. 

மூலக்கதை