லெய்செஸ்ட்டரின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி! அர்சனல் வாகை சூடியது!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
லெய்செஸ்ட்டரின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி! அர்சனல் வாகை சூடியது!

லண்டன், பிப்.15-

பிரிமியர் லீக்கின் முன்னணிக் குழுக்களான அர்சனலுக்கும் லெய்செஸ்ட்டர் சிட்டிக்கும் இடையே ஆட்டத்தில், கடைசி நிமிடத்தில் வெற்றிக் கோலை அடித்து அர்சனல் வாகைசூடியது.

இந்த ஆட்ட்த்தில் லெய்செஸ்ட்டர் சிட்டி வென்றிருக்குமேயானால், அக்குழு பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்திருக்கும்.

ஆனால், 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்ததால், இப்போது பிரிமியர் சாம்பியன் பட்டத்திற்கான போட்டா போட்டி பரவலாகி விட்டது. லெய்செஸ்ட்டர் சிட்டி, அர்சனல், டோட்டன்ஹாம் மற்றும் மன்.சிட்டி ஆகிய 4 குழுக்களுக்கு இடையிலான போட்டியாக அது மாறியிருக்கிறது.

அர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில், 45ஆவது நிமிடத்தில் லெய்செஸ்ட்டர் முதல் கோலைப் போட்டு சொந்த அரங்கில் கூடியிருந்த அர்சனல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லெய்செஸ்ட்டர் வீரர் டான்னி சிம்ப்சன் நடுவரால் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் அக்குழு பெரியும் பலவீனப்பட்டது.

இந்நிலையில், மிகத் தீவிரமாகப் போராடிய அர்சனல், 79ஆவது நிமிடத்தில் அதிவேக வீர்ர் தியோ வால்கோட் மூலம் ஒரு கோலை அடித்து ஆட்டத்தை சம்மாக்கியது.

 

சமநிலை காணும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் அர்சனல் வீர்ர் டான்னி வெல்பேக் வெற்றிக் கோலைப் போட்ட போது லெய்செஸ்ட்டர் வீர்ர்கள் நிலைகுலைந்து போயினர்.

மூலக்கதை