மொரினோ புது நிர்வாகியா? வான் கெல் ஏமாற்றம்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மொரினோ புது நிர்வாகியா? வான் கெல் ஏமாற்றம்!

மன்செஸ்ட்டர், பிப்.13-

மன்செஸ்ட்டர் யுனைடெட் கால்பந்துக் குழுவின் நிர்வாகி பொறுப்பை ஏற்க செல்சீ குழுவின் முன்னாள் நிர்வாகியான ஜோஸ் மொரினோவுடன் பேச்சுவார்த்தை நடத்தபட்டிருப்பது உண்மையானால், அது குறித்து தாம் மிகவும் ஏமாற்றம் அடைவதாக தற்போதைய நிர்வாகி லூய்ஸ் வான் கெல் சொன்னார்.

கடந்த வாரம் மொரினோவுடன் மன்.யுனை. அதிகாரிகள் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாயின. இது பற்றி அந்தக் கிளப்பின் நிர்வாகம் எந்தவொரு தகவலையும் அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை.

அப்படியொரு பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? என்று வான் கெலிடம் நிருபர்கள் கேட்ட போது, அதுக்கான சாத்தியம் இல்லை. இருந்தாலும் கால்பந்து விளையாட்டில் இதெல்லாம் சாத்தியம் தான் என்று அவர் பதிலளித்தார்.

 

அண்மைய ஆட்டங்களில் சரிவை எதிர்நோக்கியுள்ள மன். யுனை. குழு கிட்டத்தட்ட  சாம்பியன் லீக் போட்டிக்குத் தேர்வு பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறது.இதன் எதிரொலியாக, நிர்வாகி பதவியிலிருந்து  வான் கெல் நீக்கப்படலாம் என்று பரவலான ஆரூடங்கள் நிலவுகின்றன.

மூலக்கதை