நிக்கேலோடியோன் குழந்தைகள் தேர்வுக்கு பண்டேலேலா பரிந்துரை
கோலாலம்பூர், 13 பிப்ரவரி- நாட்டின் முக்குளிப்பு வீராங்கனையான பண்டலேலா ரினோங் நிக்கேலோடியோன் சிறுவர் தேர்வு விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சிறந்த ஆசியான் விளையாட்டு நட்சத்திர பிரிவில் சிங்கப்பூரைச் சேர்ந்த இர்ஃபான் ஃபான்டி, இந்தோனேசியாவின் கிம் குர்னியாவான் மற்றும் ஜெரோன் தெங் (பிலிப்பைன்ஸ்) ஆகியோருடன் பண்டேலேலா இணைந்துள்ளார்.
பிரசில், ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குத் தனிநபர் முக்குளிப்புப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசியர் பண்டலேலா ஆவார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் உயரம் கொண்ட முக்குளிப்புப் போட்டியில் பண்டலேலா மூன்றாவது நிலையில் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
