நிக்கேலோடியோன் குழந்தைகள் தேர்வுக்கு பண்டேலேலா பரிந்துரை

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
நிக்கேலோடியோன் குழந்தைகள் தேர்வுக்கு பண்டேலேலா பரிந்துரை

 

கோலாலம்பூர், 13 பிப்ரவரி- நாட்டின் முக்குளிப்பு வீராங்கனையான பண்டலேலா ரினோங் நிக்கேலோடியோன் சிறுவர் தேர்வு விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.   

சிறந்த ஆசியான் விளையாட்டு நட்சத்திர பிரிவில் சிங்கப்பூரைச் சேர்ந்த இர்ஃபான் ஃபான்டி, இந்தோனேசியாவின் கிம் குர்னியாவான்  மற்றும் ஜெரோன் தெங் (பிலிப்பைன்ஸ்) ஆகியோருடன்  பண்டேலேலா இணைந்துள்ளார்.

 பிரசில், ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குத் தனிநபர் முக்குளிப்புப் பிரிவில்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசியர் பண்டலேலா ஆவார்.  

 

 கடந்த 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் உயரம் கொண்ட முக்குளிப்புப் போட்டியில் பண்டலேலா மூன்றாவது நிலையில் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.   

மூலக்கதை