மெஸ்சிக்கு சிறுநீரக மருத்துவ பரிசோதனை!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மெஸ்சிக்கு சிறுநீரக மருத்துவ பரிசோதனை!

பார்சிலோனா, பிப்.-9,பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சிக்கு, சிறுநீரப் பிரச்சனை தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் காரணமாக அவர், கடந்த சில தினங்களாக பயிற்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.கடந்த இரு தினங்களாக அவருக்கு மருத்துப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் அவர் பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்றாலும் நாளை நடைபெறவிருக்கும் லீக் கால்பந்துப் போட்டியில் அவர் விளையாடுவார் என்று பார்சிலோனா கிளப்பின் அதிகார்கள் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு சிறுநீர் அடைப்புப் பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டார். தொடர்ந்து சிகிச்சையும் பெற்று வந்தார்.

 எனினும், அவர் கடந்த டிசம்பரிலிருந்து பார்சிலோனா குழுவுக்கு தொடர்ந்து விளையாடி வந்தார் என்பரு குறிப்பிடத் தக்கது.

மூலக்கதை