மன். யுனை. குழுவுக்கு மரினோ நிர்வாகியா? பேச்சு ஆரம்பம்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மன். யுனை. குழுவுக்கு மரினோ நிர்வாகியா? பேச்சு ஆரம்பம்!

லண்டன், பிப்.-6,

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் சரிவு கண்டு வரும் மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவுக்கு, புதிய நிர்வாகியாக ஜோஸ் மரினோவை நியமிப்பது குறித்த பேச்சுவார்த்தைத் தொடங்கி விட்டது.

அண்மையில் செல்சி குழுவிலிருந்து நீக்கப்பட்டவரான மரினோ, மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவுக்கு விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிர்வாகியான லூய்ஸ் வான் கெல், தலைமையின் கீழ், மன்செஸ்ட்டர் யுனைடெட் பெரும் தடுமாற்றத்தில் இருந்து வருகிறது. ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். நிர்வாகியை மாற்றும்படி அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

இதனால், லூய்ஸ் வான் கெல் உடனான ஒப்பந்தத்தை இவ்வாண்டு இறுதிக்குள் முடித்துக் கொள்ள மன்செஸ்ட்டர் யுனைடெட் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில்,53வயதுடைய போர்ச்சுக்கீசியரான மரினோவை அடுத்த நிர்வாகியாக அமர்த்துவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இருக்கிறது.

குறிப்பாக, மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவின் எதிரியான மன்செஸ்ட்டர் சிட்டி குழு, உலகின் மிகச் சிறந்த கால்பந்து நிர்வாகியான பெப் குவார்டியோலாவை அடுத்த நிர்வாகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறது.

அவருக்குப் போட்டி கொடுக்கக்கூடிய ஒருவரை, நிர்வாகியாக நியமிக்க வேண்டும் என்று கருதியே மன்செஸ்ட்டர் யுனைடெட் குழு, மரினோவை பொறுப்பில் அமர்த்த விரும்புவதாகத் தெரிகிறது.

மூலக்கதை