தேகாரோக்கியமும் பாரம்பரிய உணவுகளும் எனும் தொனிப்பொருளில் உணவு திருவிழா (Photos)

கதிரவன்  கதிரவன்
தேகாரோக்கியமும் பாரம்பரிய உணவுகளும் எனும் தொனிப்பொருளில் உணவு திருவிழா (Photos)

தேகாரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கோடு பாரம்பரிய உணவுப்பழக்கவழக்கத்தை மேம்படுத்தும் நோக்கோடு வவுனியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த உணவு திருவிழா வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

படங்கள்

ஞானம் அறக்கட்டளை மற்றும் உபகாரிகளின் அனுசரணையில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம். தியாகராசா உட்பட் வைத்தயிகலாநிதிகள், சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இதன்போது பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டதுடன் அவை தயாரிக்கப்படும் முறைகளும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியா கணபதிசித்தர் க. கந்தசாமி குருக்களினால் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியும் வழங்கப்பட்டிருந்தது.

2016-01-28

மூலக்கதை