வெளி­நா­டு­களின் தேவை­க­ளுக்­காக கொள்கை வகுப்­பதை எதிர்க்­கிறோம்

கதிரவன்  கதிரவன்
வெளி­நா­டு­களின் தேவை­க­ளுக்­காக கொள்கை வகுப்­பதை எதிர்க்­கிறோம்

வெளி­நா­டு­களின் தேவை­க­ளுக்­காக இலங்­கையின் வெளி­நாட்டுக் கொள்கை வகுக்­கப்­ப­டு­வதை எதிர்க்­கின்றோம். எமது நாட்டு மக்கள் மற்றும் தேசிய பாது­காப்பை முதன்­மைப்­ப­டுத்­தி­ய­தா­கவே வெளி­நாட்டுக் கொள்கை வகுக்­கப்­பட வேண்டும் என ஐ.ம.சு முன்­னணி எம்.பி நாமல் ராஜபக் ஷ தெரி­வித்தார்.

ஒரு வருடம் கழிந்­தா­வது “சீனாவின்” முக்­கி­யத்­துவம் தொடர்­பாக பிர­தமர் புரிந்து கொண்­டி­ருப்­பதை வர­வேற்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற சபை ஒத்­தி­வைப்பு வேளை மீதான பிரே­ரணை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே நாமல் ராஜபக் ஷ எம்.பி இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

எமது ஆட்­சியில் மக்­க­ளி­னதும் நாட்­டி­னதும் நன்மை கரு­தியே வெளி­நாட்டுக் கொள்­கைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

அதை­வி­டுத்து வெளி­நா­டு­களின் அர­சியல் மற்றும் பொரு­ளா­தார தேவை­களை நிறை­வேற்றும் விதத்தில் எமது நாடு வெளி­நாட்டுக் கொள்­கை­களை ஏற்­ப­டுத்தியுள்ளது.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் சில நாடு­க­ளுடன் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. காரணம் இந் நாடு­களின் தேவைக்கு ஏற்ப எமக்கு கொள்­கை­களை வகுக்க முடி­யாது என்­ப­தே­யாகும்.

அதே­வேளை புதிய நாடு­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொள்ளும் போது எமக்கு உதவி புரிந்த சம்­பி­ர­தாய பூர்­வ­மான நட்பு நாடு­க­ளு­ட­னான உற­வு­களை கைவிட முடி­யாது.

இக் கொள்­கை­யு­ட­னேயே கடந்த ஆட்­சியில் புதிய நாடு­க­ளுடன் தொடர்­புகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

கடந்த காலங்­களில் ஐ.தே. கட்­சியும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சீனாவை கடு­மை­யாக விமர்­சித்­துள்ளனர். ஆனால் ஒரு வருடம் கழித்து சீனாவின் முக்­கி­யத்­துவம் தொடர்­பாக பிர­தமர் உணர்ந்­து­கொண்­டுள்­ள­தோடு துறை­மு­க நகரம் மீண்டும் ஆரம்பிப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பிரதமரின் புரிந்துகொள்ளல் தொடர்பாக வரவேற்கின்றோம் என்றும் நாமல் ராஜபக் ஷ எம்.பி தெரிவித்தார்.

2016-01-28

மூலக்கதை