ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் விஜயத்தை எதிர்க்க மக்கள் அணிதிரள வேண்டும் : விமல்

கதிரவன்  கதிரவன்
ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் விஜயத்தை எதிர்க்க மக்கள் அணிதிரள வேண்டும் : விமல்

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணையவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு அழைப்பு விஜடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதினைந்தாம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரான செய்ட் அல் ஹுசேன் யுத்த குற்றங்களை விசாரணை செய்யவே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

தேசிய ஐக்கியத்தை சீர்குலைத்து இரானுவத்தினரை காட்டிக்கெடுக்கவே தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவராவார். உலகளவில் மனித உரிமைகள் மீறப்படுவதும் கொடூர சமய சட்டதிட்டங்களை செயற்படுத்தும் நாட்டில் வாழ்ந்தவர் . எமது நாட்டில் மனித உரிமை தொடர்பில் ஆராய முடியும் என்பது வேடிக்கையான விடயமாகும்.

மேலும் மக்களை ஏமாற்றி, நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களை காட்டிக்கொடுத்து அவர்களை தண்டிக்கவே தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் முயல்கின்றது.

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

2016-01-28

மூலக்கதை