செல்வராகவனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்!

நக்கீரன்  நக்கீரன்
செல்வராகவனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்!

செல்வராகவனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்! 

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் திரைப்படத்திற்கு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். எஸ் .ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க நந்திதா, ஸ்வேதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


ஸ்ரீதர் இயக்கத்தில் 1963-ஆம் ஆண்டு திரைக்கு வந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் தலைப்பை வைத்திருப்பதால், இது அந்த படத்தின் ரீமேக் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டனர் படக்குழுவினர். இப்படத்தின் படப்பிடிப்பு திருவான்மியூரில் உள்ள ஒரு பங்களாவில் துவங்கியிருக்கிறது. 

மூலக்கதை