முல்லைத்தீவில் மதுபான கடையை உடனடியாக அகற்றவும்-பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி

கதிரவன்  கதிரவன்
முல்லைத்தீவில் மதுபான கடையை உடனடியாக அகற்றவும்பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி

மக்களின் நலன்களை கருதாது முல்லைத்தீவு பகுதில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மூடுமாறு பாராளுமன்றத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி கோரிக்கை விடுத்துள்ளார்; புதன்கிழமை (27.01) இடம்பெற்ற சுங்கவரி மற்றும் உள்நாட்டு வரிகளின் அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் இடம்பெற்று எமது மக்கள் மீண்டெழும் இவ்வேளையில் சமூக அபிவிருத்தியை புறக்கணிக்கும் வகையில் பொதுமக்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் சுனாமி நினைவாலயம் மற்றும் சிறுவர் பூங்கா போன்றவற்றின் அருகாமையில் பொதுமக்களின் நலன்களை புறக்கணித்து மேற்படி மதுபாணசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நடவடிக்கையானது கண்டிக்கதக்கதாகும் இம்மதுபாணநிலையத்தை உடனடியாக மூடவேண்டும் .

கோரிக்கை விடுத்துள்ளார். மேற்படி மதுபானசாலைக்கு அறவிடப்பட்ட வரிப்பணம் சமூகநலனை புறக்கணித்தே அறவிடப்பட்டுள்ளது அரசாங்கத்தினால் வரிப்பணம் அறவிடப்படுகையில் சமுகத்திற்கு ஏற்படும் சாதகபாதக நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும் எனவும் தெரித்த அவர் மேலும் அங்கு உரையாற்றிய போது அரசாங்கம் வரிகளை அறவிடும் போது நீதித்தண்மை நிலவவேண்டியதன் அவசியம் பற்றியும் கருத்துத்தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏராளமான சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்பதனை கவனத்தில் கொண்டு பொருத்தமான வகையில் எமது இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினையும் துரிதப்படுத்தி நாடடின் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிப்பதனூடாக சிறந்த எதிர்காலத்தை அமைக்க அனைவரும் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .

2016-01-28

மூலக்கதை