இரு பெண்களை மணம் முடிக்க வேண்டும் : ஆண்களுக்கு எரித்திரியா அறிவிப்பு

CANADA MIRROR  CANADA MIRROR
இரு பெண்களை மணம் முடிக்க வேண்டும் : ஆண்களுக்கு எரித்திரியா அறிவிப்பு

எரித்திரியாவில் ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் புரிய வேண்டுமென்றும், அவ்வாறு இல்லாவிட்டால் குறித்த நபர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

மேலும், அந்த நாட்டில் பெண்கள் தொகை அதிகமாகவும் ஆண்களின் சனத் தொகை குறைவாகவும் காணப்படுவதே இதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை 4 மில்லியன்களாகும். 1998-2000 ம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால் அந்த நாட்டு அண்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.

எனவே, ஆண்களின் தொகை வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டே அந்நாட்டு அரசு குறித்த சட்டமூலத்தை அறிவித்துள்ளது. இவை தவிர, குறித்த ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த நாட்டு அரசாங்கம் நன்கொடையாக வழங்கி வைக்கவுள்ளதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 total views, 11 views today

மூலக்கதை