ஸிகா வைரஸ்: உலகம் முழுவதும் வெளியிடப்படும் பயண ஆலோசனைகள்

CANADA MIRROR  CANADA MIRROR
ஸிகா வைரஸ்: உலகம் முழுவதும் வெளியிடப்படும் பயண ஆலோசனைகள்

கனடாவில் ஸிகா வைரஸினால் தற்போதைக்கு ஆபத்து இல்லை எனினும் கர்ப்பிணிப் பெண்கள் வைரஸ் தொற்று அதிகரித்துள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கனேடிய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆபிரிக்க நாடுகளை தாக்கிய எபொலா வைரஸ் போன்று தற்போது ஸிகா வைரஸ் தலைதூக்கியுள்ளது. இந்த வைரஸின் தாக்கமானது தற்போது அமெரிக்கா மற்றும் சிலி நாடுகளிலேயே பரவியுள்ளது. எனினும் உலக நாடுகளிற்கும் பரவலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனேடிய அரச இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. ஏனைய நாடுகளைப் போன்று கர்ப்பிணித் தாய்மார்கள் அல்லது அது தொடர்பில் ஆலோசிப்பவர்கள் ஸிகா வைரஸினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்வதற்;கு முன்னர் ஆரோக்கிய சேவை வழங்குநருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என கனேடிய பொது சுhதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

குறித்த பயணத்தை பிற்போட முடியாது எனில் நுளம்புக் கடிகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது. இவ்வாறான பயண ஆலோசனைகள் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

11 total views, 11 views today

மூலக்கதை