மாதத்தின் கடைசி புதன் கிழமைகளில் துறை ரீதியான ஆய்வு:பிரதமர்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
மாதத்தின் கடைசி புதன் கிழமைகளில் துறை ரீதியான ஆய்வு:பிரதமர்

Thursday, 28 January 2016 09:20

மாதத்தின் கடைசி புதன் கிழமைகளில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் நடத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

துறை ரீதியான செயல்பாடுகள் என்னென்ன என்று அறிந்துக்கொள்ள, அதுக்குறித்து விவாதிக்க நரேந்திர மோடி விரும்புவதாகத் த்கேரிகிறது. இதையடுத்து இன்று வேதியியல் மற்றும் வேளாண்மைத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, ஊடக துறை உள்ளிட்ட 4 துறை அமைச்சக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைப்பெற்றது.

இதே போன்று அனைத்துத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை தமது தலைமையில் மாதத்தின் கடைசி புதன் கிழமைகளில் நடத்த மோடி அறிவித்துள்ளார் என்றும் தெரிய வருகிறது.

 

மூலக்கதை