சமத்துவ மக்கள் கட்சியை கலைக்க சதி:சரத் குமார்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
சமத்துவ மக்கள் கட்சியை கலைக்க சதி:சரத் குமார்

Thursday, 28 January 2016 09:43

சமத்துவ மக்கள் கட்சியை கலைக்க சதி நடைபெற்று வருகிறது என்று அக்கட்சியின் தலைவர் சரத் குமார் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த சரத் குமார். எர்ணாகுளம் நாராயணனை
கட்சியிலிருந்து நீக்கம் செய்தது பற்றி கூறினார். அப்போது அவர் கட்சியில் இருந்துக்கொண்டு எதையும் செய்யவில்லை என்று சரத் குமார் கூறினார்.

சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர் உட்பட 5 பேர் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் பொன் ராதா கிருஷ்ணன் தலைமயில்
இணைந்துள்ளனர்.இந்நிலையில்தான் சமத்துவ மக்கள் கட்சியை கலைக்க சதி நடைபெற்று வருகிறது என்று சரத் குமார் கூறியுள்ளார். அதோடு கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முதல் இப்போது வரை சமத்துவ மக்கள் கட்சி அஇஅதிமுக கூட்டணியில் உள்ளது என்றும் சரத் குமார் கூறியுள்ளார்.

மூலக்கதை