ரஜினிக்கு அறிவித்ததன் மூலம் விருதுக்கு அங்கீகாரம்:பிரகாஷ் ஜவடேகர்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ரஜினிக்கு அறிவித்ததன் மூலம் விருதுக்கு அங்கீகாரம்:பிரகாஷ் ஜவடேகர்

Thursday, 28 January 2016 08:00

ரஜினிக்கு அறிவித்ததன் மூலம் விருதுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று மத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர், ரஜினிகாந்த் நல்ல நடிகர், நல்ல மனிதர், அதோடு தனக்கென உள்ள ஒரு தனி பாணியால் தலைமுறையைக் கடந்த ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பவர். இவருக்கு விருது அறிவித்தால் பத்ம விபூஷன் விருதுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனவே, அவருக்கு விருது அறிவித்ததில் எந்தவித அரசியல் உள் நோக்கமும் கிடையாது என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைதான் விதித்துள்ளது என்றும், இதை சரியான வாதத்தின் மூலம் நீக்க முடியும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் மேலும் கூறியுள்ளார்.

மூலக்கதை