துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கம்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கம்

Thursday, 28 January 2016 08:42

துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா அதிமுகவிலிருந்து நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த பழ. கருப்பையா அம்மாவின் நேரடிப் பார்வையில் இருந்துவந்தவர். இவரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து தமது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்துள்ள
பழ.கருப்பையா, தமது ராஜினாமா கடிதத்தை எவரும் பெற்றுக்கொள்ள முன் வரவில்லை என்றும், ஊடகங்கள் மூலமாக நான் இதைத் தெரிவிக்கும் போது, அம்மாவின் உத்தரவுக்கு இணங்க அவர்களாக எனது கடித்ததிப் பெற்றுக் கொள்வார்கள்.என்றும் கூறியுள்ளார்.

துறைமுகம் தொகுதி எம்எல்ஏவாக நான் அந்த தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாமல் தோற்றுப் போனேன் என்றும், அம்மாவை தனியாக சந்திக்க வாய்ப்பின்றி கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே, எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று பழ கருப்பையா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்

மூலக்கதை