வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
நிரந்தர நியமனம் வழங்குமாறுகோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உப தலைவர் ரீ.கிஷான் தெரிவிக்கையில், ‘கடந்த காலத்தில் கிழக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து, கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற 1,400 பட்டதாரிகள் உள்ளனர்.
35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கும் மாற்றுத்திறனாளிகளான பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும்.
உடனடியாக மகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கமும் தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு எமது பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் மீண்டும் முன்வைக்கவுள்ளோம்’ என்றார்.
2016-01-28



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
