ஞானசார தேரர் வைத்தியசாலைக்கு மாற்றம் ஏனையவர்களையும் கைது செய்ய உத்தரவு

கதிரவன்  கதிரவன்
ஞானசார தேரர் வைத்தியசாலைக்கு மாற்றம் ஏனையவர்களையும் கைது செய்ய உத்தரவு

நீதி­மன்ற அவ­ம­திப்பு உள்­ளிட்ட மூன்று குற்றச் சாட்­டுக்­களின் கீழ் கைது செய்­யப்­பட்ட கல­கொட அத்தே ஞான­சார தேரரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் வி­தித்த உத்­த­ர­வுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஹோமா­கம நீதிவான் நீதி­மன்ற வளா­கத்தில் கலகம் விளை­விக்கும் வண்ணம் செய­ற்­பட்ட பிக்­குகள் உள்­ளிட்­டோரை கைது செய்­யு­மாறு ஹோமா­கம ஞானசார தேரர் நீதிவான் ரங்க திஸா­நாயக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

நீதி­மன்ற நடவடிக்கைக்கு தடையேற்படுத்தல் , அரச ஊழி­ய­ருக்கு அச்­சு­றுத்தல் விடுத்தல், அரச சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்தல், சட்ட விரோத கூட்­டத்தின் உறுப்­பி­ன­ராக இருத்தல், பொலி­ஸாரை தாக்­கி­யமை, நீதி­மன்­றி­லி­ருந்து வழக்குப் பொருட்­களை எடுத்துச் சென்­றமை உள்­ளிட்ட 11 குற்றச் சாட்­டுக்­களின் கீழ் இவர்­களை கைது செய்­வது குறித்து சாட்­சி­யங்கள் திரட்­டப்­பட்டு அது தொடர்பில் ஹோமா­கம பொலி­ஸா­ரினால் நீதிவான் ரங்க திஸா­நா­யக்­க­வுக்கு அறிக்கை சமர்­ப்பித்­தனர். தண்டனைக்கோவையின் 316 314 410 183 ஆகிய பிரிவுகளை குறித்த சந்தேக நபர்கள் மீறியுள்ளதாக அந்த அறிக்கையில் பொலிஸார் சுட்டிக்காட்டியிருந்தனர். இத­னை­ய­டுத்தே சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரையும் கைது செய்­யு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார். அத்துடன் புானசார தேரர் குறித்த வழக்கை பெப்ரவரி 9 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதிக்கு நீதவான் மாற்றியுள்ளார்.

இதனி­டையே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கல­கொட அத்தே ஞானசார தேரர் சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்ளார். நேற்று மாலை அவர் இவ்­வாறு சிறைச் சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்ப்ட்­டுள்ளார். சிறுநீர் கடுப்பு நோய் கார­ண­மாக வழ­மை­யாக ஞான­சார தேரர் உட்­கொள்ளும் மருந்தை இரு நாட்­க­ளாக அவர் உட்­கொள்­ளா­ததால் அவர் சுக­யீ­ன­முற்­ற­தா­கவும் அத­னா­லேயே அவர் சிறைச்சாலை வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் சிறைச்­சாலை தக­வல்கள் தெரி­வித்­தன.

முன்­ன­தாக நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய வெலிக்­கடை சிறையில் பிரத்­தி­யேக இடத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சாலை தக­வல்கள் தெரி­வித்­தன.. ஞான­சார தேரரை வேறு கைதிகள் இல்­லாத எவரும் இல­குவில் நுழைந்து விட முடி­யாத பிரத்­தி­யேக இடத்­தி­லேயே வைத்திருந்ததாகவும் பாது­காப்பு உள்­ளிட்ட பல்­வேறு நிலை­மை­களை கருத்தில் கொண்டே இவ்­வாறு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் நிஸான் தன­சிங்ஹ தெரி­வித்தார்.

சிறைச் சாலை உள்­ளக தக­வல்­களின் பிர­காரம், கல­கொட அத்தே ஞான­சார தேரர் வெலிக்­கடை சிறை வளா­கத்தில் உள்ள கொழும்பு விளக்­க­ம­றியல் சிறையில் ‘எச்’ பிரிவில் ஆரம்­பத்தில் தடுத்து வைக்­கப்ப்ட்­டுள்ளார். நேற்று குறித்த பிரிவில் ஞான­சார தேர­ருடம் இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்த அதிபர் ஒரு­வரும் ஆசி­ரியர் ஒரு­வரும் இருந்­த­தாக அறிய முடி­கின்­றது. ஞான­சார தேரரின் பாவ­னைக்­காக நிலத்தில் மெத்தை ஒன்று போடப்பட்­டி­ருந்­த­தா­கவும் சிறைச்­ச­லைக்கு வந்­தது முதல் தேரர் அவ்­வப்­போது சிறைச் சாலை அதி­கா­ரி­க­ளுக்கு தர்ம உப­தேசம் செய்­த­தா­கவும் அறிய முடி­கின்­றது.

நேற்று காலை சிறைச்­சா­லையில் வழங்­கப்­பட்ட உண­வினை காலை உண­வாக ஞான­சார தேரர் ஏற்றுக்­கொண்­ட­தா­கவும் பகல் அவரை பார்க்க வந்த பிர­மு­கர்கள் வழங்­கிய உண­வினை அவர் பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் சிறைச்­சாலை தக­வல்கள் தெரி­வித்­தன.

இந் நிலையில் ஞான­சார தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திலும் பாதுகாப்பு நேற்று அதிகரிக்கப்ப்ட்டிருந்தது. வெலிக்கடை சிறை வளாகத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு நேற்று உட்படுத்தப்பட்டன.

இதேவேளை பொது பலசேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞானசாரதேரர் பெப்­ர­வரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஏற்­பட்ட பதற்றத்தை தொடர்ந்து நேற்றும் குறித்த நீதி­மன்ற வள ா­கத்­துக்கு பலத்த பாது­காப்பு அளிக்­கப்பட்­டி­ருந்­தது.

நேற்று காலை முதல் நேற்று பிற்­பகல் ஒரு மணி வரை இந்த பாது­காப்பு நீடித்­தது.

நான்கு உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர்­களின் நேரடி கட்­டுப்­பாட்டில் மூன்­ற­டுக்­காக இந்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்ப்ட்­டி­ருந்­தன. நேற்று காலை பொது பல­சேன உள்­ளிட்ட அமைப்­புக்­களின் பெளத்த பிக்­குகள் பலர் ஞான­சார தேரரை பிணையில் விடு­விக்க இடை­யீட்டு மனு­வொன்றை தாக்கல் செய்ய ஹோமா­கம நீதிவான் நீதி­மன்­றுக்கு வரு­வ­தா­கவும் இதன் போதும் பதற்ற நிலையை அவர்கள் தோற்­று­விக்கக் கூடிய வாய்ப்­புக்கள் இருப்­ப­தா­கவும் பொலி­ஸா­ருக்கு தக­வல்கள் கிடைத்த நிலை­யி­லேயே பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

நுகே­கொடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட அனைத்து பொலிஸ் நிலை­யங்­களில் இருந்தும் சுமார் 300 இற்கும் மேற்­பட்ட பொலிஸார் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றம் அமைந்­துள்ள பகு­திக்கு வர­வ­லைக்­கப்­பட்ட நிலையில் கலகத் தடுப்புப் பொலி­ஸாரும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் மேல­திக பாது­காப்­புக்­காக வர­வ­ழைக்­கப்­பட்­டனர். அத்­துடன் தண்ணீர் பிர­யோகம் மேற்­கொள்­ளவும் ஆயத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

எனினும் நேற்று பிற்­பகல் வரை குறித்த தேரர்கள் வருகை தர­வில்லை என்­ப­துடன் இடை­யீட்டு மனுவும் தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்து நேற்று பிற்­பகல் ஒரு மணி­ய­ளவில் நீதி­மன்­றுக்கு போடப்ப்ட்­டி­ருந்த மூன்­ற­டுக்கு பாது­காப்பில் இரு அடுக்­குகள் தளர்த்­தப்பட்டு சாதா­ரண பொலிஸ் பாது­காப்­புடன் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் தொடர்ந்­தன.

நேற்­றைய தினம் ஹோமா­கம நீதி­மன்­றுக்கு செல்லும் சந்­தியில் போக்கு வரத்து தடை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த பொலிஸார் , நீதி­மன்­றுக்கு செல்லும் ஒழுங்கை மற்றும் நீதி­மன்ற வாயில் என்­ப­வற்றில் பாது­காப்பை பலப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். நீதி­மன்ற வளா­கத்­துக்­குள்ளும் பொலிஸ் பாது­காப்பு போடப்ப்ட்­டி­ருந்­தது. குறிப்­பாக நீதி­மன்றின் பிர­தான வாயிலின் அருகே உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர்கள் இருவர் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்பட்­டி­ருந்­த­துடன் அவர்­களின் நேரடி கட்­டுப்­பாட்டில் கலகத் தடுப்புப் பொலி­ஸாரும் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்ப்ட்­டனர்.

நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சென்றோர் கடு­மை­யான சோத­னை­க­ளுக்கும் இதன் போது உட்­ப­டுத்­தப்பட்­டனர். எவ்­வா­றா­யினும் நேற்­றைய தினம் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் தொடர்ந்­தன.

2016-01-28

மூலக்கதை