அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கான போட்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை நிறுவனர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், அண்ணாவின் பிறந்த நாளினையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 107-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த 2015 நவம்பர் 14, 15 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான இறுதிப்போட்டிகள் பிப்ரவரி 6, 7 (சனி, ஞாயிறு) ஆகிய இருநாட்கள் சோழிங்கநல்லூர் ஜி.பி.ஜனராஜன் திருமண மண்டபத்தில் நடைபெறும். இறுதிப் போட்டி ஒவ்வொன்றிலும் வெற்றி பெறும் பள்ளி-மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000, ஆறுதல் பரிசு ரூ.5,000 வீதம் (10 பேருக்கு) தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
2016-01-28



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
