மக்கள் புகாருக்கு தீர்வு காண மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: மோடி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (8:55 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (8:56 IST)

மக்கள் புகாருக்கு தீர்வு காண மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: மோடி 

பொதுமக்கள் புகாருக்கு தீர்வு காண மறுக்கும் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அல்லது கட்டாய ஓய்வு அளிக்க உயரதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பல்வேறு மாநில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மாநில அரசுகள் நடத்திய வரும் மக்கள் நலப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு ஊழியர்களை கண்டித்த அவர், மக்களுடன் அதிகாரிகள் நேரடியாக தொடர்பு வைத்து குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

மூலக்கதை