மத்திய மந்திரி வீட்டுக்கு பேரணியாக சென்ற 60 மாணவர்கள் கைது

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (8:17 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (8:17 IST)

மத்திய மந்திரி வீட்டுக்கு பேரணியாக சென்ற 60 மாணவர்கள் கைது

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதால், இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

டெல்லியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி வீட்டுக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதை மீறி பேரணியாக செல்ல முயன்ற 60 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே ஐதராபாத் பல்கலைக்கழகம் அருகில் 7 மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இதில் 6 மாணவர்களின் உடல்நிலை மோசமானதால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஒரு மாணவர் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அப்பாராவ் விடுமுறையில் சென்றதால், விபின் ஸ்ரீவஸ்தவா துணைவேந்தராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். 

மூலக்கதை