ஏழு கோடி ரூபாய்க்கு விலை போகும் இந்த புகைப்படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?

CANADA MIRROR  CANADA MIRROR
ஏழு கோடி ரூபாய்க்கு விலை போகும் இந்த புகைப்படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?

கருப்பு நிற பின்புலத்தில் மிக சாதாரணமாக எடுக்கப்பட்ட ஒரு உருளைக்கிழங்கின் புகைப்படம் 7.38 கோடி ரூபாய்க்கு விலை போகியிருக்கிறது என்பதை சுமாரான ஒரு போட்டோகிராபரால் கூட தாங்கிக் கொள்ள முடியாதுதான். ஆனால், தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இது 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். இதில் இருப்பது அயர்லாந்து நாட்டில் விளைந்த ஆர்கானிக் உருளைக்கிழங்கு.

162×162 செ.மீ (பிரிண்டிங் அளவு) அளவுள்ள இந்த புகைப்படத்தை எடுத்திருப்பவர் பாரிசைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞரான கெவின் அபோஷ்ச்.

உங்கள் புகைப்படத்தை பாரிசில் நடந்த கண்காட்சியில் பார்த்திருக்கிறேன் அதை வாங்கிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று ஒரு பெயர் வெளியிட விரும்பாத தொழிலதிபர் கெவினின் வீட்டுக்கே வந்து கேட்க, போனால் போகட்டுமென்று கெவினும் ஓகே சொல்ல சில தினங்களுக்கு பின்னர் 1 மில்லியன் யூரோ கொடுத்து அந்த தொழிலதிபர் இந்த புகைப்படத்தை விலைக்கு வாங்கிச் சென்றுள்ளார். இந்த செய்தி ஐரோப்பாவின் முன்னணி ஊடகங்கள் மூலமாக வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் பிரபலங்கள் ஜானி டெப், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் போன்றவர்களை பிரத்யேகமாக புகைப்படமெடுத்த பிரபல புகைப்படக் கலைஞர்தான் கெவின் அபோஷ்ச்.

என்ன இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்பவர்களுக்கு, கெவின் இருட்டான முட்டுச்சந்தில் எடுத்த படு சுமாரான புகைப்படத்தைக் கூட விலைக்கு வாங்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

195 total views, 195 views today

மூலக்கதை