டொராண்ரோ Parkdale பகுதி குடியிருப்புக் கட்டிடத்தில் தீ : மூவர் மருத்துவமனையில்…..

CANADA MIRROR  CANADA MIRROR
டொராண்ரோ Parkdale பகுதி குடியிருப்புக் கட்டிடத்தில் தீ : மூவர் மருத்துவமனையில்…..

டொராண்ரோ Parkdale பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் பாதிக்க்பபட்ட மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 11.30 மணியளவில், மேற்கு King வீதி மற்றும் மேற்கு Queen வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியிலேயே குறித்த தீ விபத்து சம்பவித்துள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 20 தீயணைப்புப் படை வீரர்கள் தீயினை 11.40 மணியவிலேயே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும், சமையல் அறையில அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரம் ஒன்று தீபற்றிக் கொண்டதால் இந்த தீ சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பத்தில் பாதிக்கப்பட்ட மூவரில் இரண்டு பேர் உயிராபத்தான நிலையிலும், மூன்றாவது நபர் மோசமான காயங்களுக்கு ஆளான நிலையிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், மூன்றாவது நபர் அவ்வாறே இன்னமும் இருப்பதாக கூறியுள்ளனர்.அதேவேளை சுவாசக் கோளாறுக்கு ஆளான ஒரு பெண்ணிற்கு சம்பவ இடத்தில் வைத்தே மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
.

47 total views, 47 views today

மூலக்கதை