அகில உலகையும் அதிரவைத்த எயர் இந்தியா வெடி-குண்டு தயாரிப்பாளர் இந்தர்ஜித் சிங் றெயாட் 30-வருடங்களின் பின்னர் விடுதலை

CANADA MIRROR  CANADA MIRROR
அகில உலகையும் அதிரவைத்த எயர் இந்தியா வெடிகுண்டு தயாரிப்பாளர் இந்தர்ஜித் சிங் றெயாட் 30வருடங்களின் பின்னர் விடுதலை

கனடா-வன்கூவர். 1985எயர் இந்தியா குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்தர்ஜிட் சிங் றெயட் என்ற ஒரே நபர் அவரது பொய்வாக்குமூலத்திற்கான தண்டனையில் இருந்து சட்டபூர்வமான விடுதலை பெற்றுள்ளார்.
றெயட் 2004-05ல் இடம்பெற்ற எயர் இந்திய விசாரனையில் நீதி மன்றத்தை தவறான பாதையில் வழி நடாத்தினார் என 2006 குற்றம் சாட்டப்பட்டார். 2010ல் குற்றவாளியாக காணப்பட்டதால் ஒன்பது வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கனடிய வரலாற்றில் பொய்வாக்குமூலத்திற்கு நீண்ட கால சிறைத்தண்டனை பெற்ற முதல் நபர் இவராவார்.
30 வருடங்களின் பின்னரும் மாஃபியா நடைமுறையில் உள்ள அமைதி எனும் குறியீடு சட்டரீதியாக உண்மையை சொல்ல மறுப்பது எயர் இந்திய குடும்பங்களிற்கு இன்னமும் மிகவும் கசப்பான மருந்தாகும் என கூறப்படுகின்றது.
குண்டு தயாரிப்பாளர் மீண்டும் விடுதலையாகின்றார். இவர் மௌனமாக இருந்தமையே திரும்பவும் விடுதலையாவதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
இவர் மூன்று தடவைகள் தண்டனை பெற்றுள்ளார். கனடாவின் மிக மோசமான வெகுஜன கொலை குற்றவாளி. செப்டம்பர் 11 வரை 1985 யூன் 23 எயர் இந்தியா குண்டு வெடிப்பு எங்கும் எப்போதும் ஏற்படாத கொலைகார தனமான குண்டு வெடிப்பாகும்.
பஞ்சாப்பை சேர்ந்த மெக்கானிக்கான இவர் வன்கூவர் ஐலன்டில் வசித்தார். இவர் வாங்கிய டைனமைட் வெடித்தூண்டிகள் மற்றும் பற்றறிகள் எயர் இந்திய விமானம் 182ல் பயணம் செய்த 329 பயணிகளின் உயிரை பறிகொண்டதென கூறப்படுகின்றது. இந்த விமானம் ரொறொன்ரோவில் இருந்து புறப்பட்டு மொன்றியல் தரித்து லண்டன் ஹீதுரோ விமானநிலையம் நோக்கி பறந்த போது அயர்லாந்து கடலோரப்பகுதியில் வெடித்து சிதறியது.
இரண்டாவது குண்டு ஏறத்தாள ஒரே நேரத்தில் ஜப்பானில் வெடித்தது. இரண்டு யப்பானிய பொதிகள் கையாளுபவர்கள் பொதிகளை டோக்கியோ நறிட்டா சர்வதேச விமான நியைத்திற்கு செல்லும் மற்றொரு எயர் இந்திய விமானத்திற்கு மாற்றம் செய்து கொண்டிருந்த சமயம் வெடித்தது. இரண்டு குண்டுகளும் வன்கூவரில் உருவாக்கப்பட்டதெனவும் தெரிவிக்கப்பட்டது. பயணிப்பதற்கு சரிபார்க்கப்பட்ட பயணிகள் எவரும் ஏறவில்லை. உலகின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றாக இரண்டு கொடிய படுகொலைகளை ஏற்படுத்துவதே திட்டமாகும்.
மொத்தமாக 331 அப்பாவிகள் அன்று உயிரிழந்தனர். பெரும்பாலானவர்கள் கனடியர்கள். டசின்கணக்கான சிறுவர்கள். அனைத்து குடும்பங்களும் அழிக்கப்பட்டன.
இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் றெயாட் முதல் தண்டிக்கப்பட்டார். சீக்கிய தாயகத்திற்காக போராடும் தீவிர வாத குழுவின் அங்கத்தவரான இவர் மற்றும் இருவருடன் இந்த 182 விமான பாரிய படுகொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
றெயாட் தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்ல மறுத்துவிட்டார். ஆனால் மனித கொலை குற்றத்தை ஒப்பு கொண்டார். மற்றய இருவரும் விடுதலையானார்கள்.
றெயாட் மௌனம் சாதித்தமை அவருக்கு ஒரு மூன்றாவது தண்டனைக்கு வழிவகுத்தது.
தனது தண்டனை காலத்தின் மூன்றில் இரண்டு பங்கை கழித்ததும் தேசிய பரோல் வாரியம் இவருக்கு சட்டரீதியான விடுதலையை வழங்கியுள்ளது.

36 total views, 36 views today

மூலக்கதை