ஒரு வாரத்தில் இரு தடவைகள் ஒரே வீட்டில் திருட்டு. நால்வர் கைது

CANADA MIRROR  CANADA MIRROR
ஒரு வாரத்தில் இரு தடவைகள் ஒரே வீட்டில் திருட்டு. நால்வர் கைது

கனடா-ஸ்காபுரோ, மார்க்கம் பகுதியில் ஒரு வாரத்தில் இரண்டு தடவைகள் ஒரே வீட்டிற்குள் திருடிய நால்வர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். மூன்று மனிதர்களும் ஒரு வாலிபனும் இத்திருட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த சந்தேக நபர்கள் மார்க்கம் மற்றும் எல்ஸ்மியர் வீதியில் உள்ள வீடொன்றிற்குள் நவம்பர் மாதம் 30 அதிகாலை 3.40மணியளவில் நுழைந்து வீட்டுச் சொந்தக்காரரான ஆணிடம் கொள்ளை அடித்துள்ளனர்.
சரியாக ஒரு வாரத்தின் பின்னர் அதே சந்தேக நபர்கள் குழுவினர் அதிகாலை 2.15மணியளவில் அதே வீட்டை உடைத்து நுழைந்ததோடு வீட்டு சொந்தக்காரரையும் தாக்கியதுடன் அவரது உடமைகளையும் திருடியுள்ளனர்.
ஜனவரி-21 இந்த திருட்டுடன் சம்பந்தப்பட்ட நான்கு ஆண்கள் கைதாகினர்.
ரொறொன்ரோவை சேர்ந்த நிதர்சன் இளஞ்சூரியநாதன் 25, மிசிசாகாவை சேர்ந்த 19வயது மிதுன் ரத்னகுமார் மற்றும் மார்க்கத்தை சேர்ந்த 19வயது தபிசன் நவநீதன் ஆகியோர் மீது இரண்டு ஆயுதங்களுடன் கூடிய திருட்டு, பலவந்தமாக அடைத்து வைத்தமை, உடைத்து-உள்ளே நுழைந்தது, 5,000 டொலர்களிற்கு கீழ்ப்பட்ட திருட்டு மற்றும் குற்றச்செயல்கள் மூலம் சொத்துக்களை பெற்று கொண்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
நான்காவது சந்தேக நபரான மிசிசாகாவை சேர்ந்த 17வயதுடையவர்,  இளைஞர் குற்றவியல் நீதி சட்ட விதிகளின் கீழ் அடையாளம் காட்டப்படவில்லை.
.

13 total views, 13 views today

மூலக்கதை