வலயக்கல்வி அலுவலக புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார் குருகுலராஜா

கதிரவன்  கதிரவன்
வலயக்கல்வி அலுவலக புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார் குருகுலராஜா

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனைக்கு 20 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டிடத்தொகுதியினை வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு த.குருகுலராஜா அவர்கள் வைபவரீதியாக திறந்து வைத்தார்.

இன்று மாலை 4.00 மணிக்கு மயிலாட்டம் கும்மியாட்டம் மற்றும் தமிழ்பாரம்பரிய கலை அம்சங்களோடு விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின கட்டிட ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டதோடு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு விருந்தினர்களுக்கான நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு த.குருகுலராஜா அவர்கள் வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனிஜெகநாதன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீலு வலயக்கல்விப்பணிப்பாளர் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் வலயக்கல்விப்பணிமனை ஊளியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

2016-01-27

மூலக்கதை