வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவு வாயில் நீதிபதி இளஞ்செழியனால் திறந்துவைக்கப்பட்டது

கதிரவன்  கதிரவன்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவு வாயில் நீதிபதி இளஞ்செழியனால் திறந்துவைக்கப்பட்டது

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நுழைவு வாயில் திறப்பு விழா இன்று நண்பகல் 12.30 மணிக்கு நீதிபதி மா.இளஞ்செழியனால் திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலை சமூகத்தினரால் நீதிபதிகளுக்கு மாலைகள் போட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கண்டி வீதியில் அமைந்துள்ள தெற்கு கல்வி வலயத்தின் முன்னிருந்து பாண்ட் வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு சமய பெரியர்களின் ஆசியுடன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் புதிய நுழைவாயில் நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மன்னார் மாவட்ட நீதிபதி ஜி.அலக்ஸ் ராஜா, கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஐ.பிரபாகரன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார, தெற்கு வலய கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.அன்ரன் சோமராஐh ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

2016-01-27

மூலக்கதை