புதுப்பேய்! கிளாமர் பேய்! சீனியர் பேய்!

நக்கீரன்  நக்கீரன்
புதுப்பேய்! கிளாமர் பேய்! சீனியர் பேய்!

புதுப்பேய்! கிளாமர் பேய்! சீனியர் பேய்! - அரண்மனை 2 அலப்பரைகள்!

னவரி 29-ஆம் தேதி ரிலீஸாகும் அரண்மனை 2 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது. அரண்மனை திரைப்படத்தின் பேய் வெற்றியைத் தொடர்ந்து, இந்த படத்திலும் கிளாமர் பேய், காமெடி பேய் என சுந்தர்.சி வெளுத்து வாங்கியிருப்பதாக படத்தில் நடித்தவர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள்.


ஹீரோ சித்தார்த் “அரண்மனை 2-ல் மூன்று வகையான பேய்கள் இருக்கு. சூரி, கோவை சரளா, மனோபாலா போன்ற காமெடி பேய்கள், ஹன்சிகா, த்ரிஷா, பூனம்பாஜ்வா என்கிற கவர்ச்சி பேய்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர்னு டெக்னிஷன் பேய்கள் இருக்காங்க. நான் பேய் படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை” என்று கூறியிருக்கிறார்.

ஹீரோயின் த்ரிஷா “இந்தப்படத்தில் நடிச்சது எனக்கு புது அனுபவம். இதில் சில காட்சிகளில் செக்ஸியா வருவேன். செக்ஸி என்பதைவிட பியூட்டிஃபுல்லா காட்டிருக்காங்க என்றுதான் சொல்லணும்.”என கூறுகிறார்.


மேலும் இந்த படத்தின் சீனியர் பேய் ஹன்ஸிகா கூறுகையில் “ அரண்மனை 2 ஆரம்பித்த போது இது என்னோட படம் நான் இல்லாமல் ஷூட்டிங் போகக்கூடாது என உரிமையாக சொன்னேன். இதில் எனக்கு ’மாயா’ என்கிற நல்ல பாட்டு இருக்கிறது. வெரி நைஸ் சாங். சுந்தர் சாருடன் இது எனக்கு 4-வது படம். இதுவும் சூப்பர் ஹிட் ஆகும்” என்கிறார்.

மூலக்கதை