பெற்றோர்கள் கவனமின்றி மாணவரின் தகவலை தரக்கூடாது: தகவல் ஆணையம்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
பெற்றோர்கள் கவனமின்றி மாணவரின் தகவலை தரக்கூடாது: தகவல் ஆணையம்

Wednesday, 27 January 2016 09:42

பெற்றோர்கள் கவனமின்றி மாணவரின் தகவலை தரக்கூடாது என்று தகவல் ஆணையம் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 

தங்களைப் பற்றி மாணவர்கள் கேட்கும் தகவலை அவர் படிக்கும் கல்வி நிறுவனங்கள் தரக் கூடாது என்று, தகவல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.அப்படி தர முடிவு செய்தால் மாணவரின் பெற்றோர் கவனத்துக்கு விஷயத்தை கொண்டு சென்று அவர்களின் சம்மததுக்குப் பிறகே கல்வி நிறுவனங்கள் மாணவருக்கு அவர் தம்மைப் பற்றிக் கேட்கும் விவரங்களை அளிக்கலாம் என்றும் தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அப்படி பெற்றோர் கவனமின்றி மாணவர்களுக்கு தரப்படும் தகவல்களால் மாணவரின் உயிரிழப்பு வரை விபரீதம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ள தகவல் ஆணையம், மாணவரின் பாதுகாப்புக்கு கல்வி நிறுவனங்களே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.

 

மூலக்கதை