வெலிமடை விபத்தில் ஒருவர் பலி

கதிரவன்  கதிரவன்
வெலிமடை விபத்தில் ஒருவர் பலி

வெலிமடை, பொரலந்தை, என்ட்ருகொல்ல பிரதேசத்தில் 26.01.2016 அன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதான 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர், பொரலந்தை தபால் நிலையத்தில் சேவையாற்றி வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

என்ட்ருகொல்ல பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்செல்ல வந்த லொறியொன்று, வீதியில் சென்றுக்கொண்டிருந்த மேற்படி நபரின் மீது மோதியுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ் விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2016-01-27

மூலக்கதை